“உ” இசைத்தட்டு வெளயீடு”27.04.2014″ சிவன்ஜீவ்.சிவராம் இசையில்

புலம்பெயர் தமிழர்களின் கலைப்படைப்புகளை வளர்க்கும் நன்நோக்குடன் கடந்த 1992 ஆண்டுமுதல் ஐரோப்பாவில் முதல் இருமொழி பண்பலை வானொலிச்சேவையினுடாக புலம்பெயர் மண்ணில் எமது கலைப்பயணம் ஆரம்பித்து பல வடிகங்களில் இணையதொலைக்காட்சி சிறுவர் புத்தகங்கள் ஒலிப்பேழை சற்ரலைற் ஊடான வானொலி எனத்தொடரும் எமது கலைப்பணி வளரும் எமது கலைஞர்களுக்கு வழிஅமைத்துக்கொடுப்பதேபெரும்பணியாக தொடர்கிறது அந்த வகையில்” உ” இசைப்பேழையில் பணியாற்றிய அனைவருக்கும் மலரும் மாலைகள் கலையகத்தின் இனிய வாழ்த்துக்கள்

ஜெர்மனி டோட்முண்ட் சிவன் கோவில்: தேர்த்விழா காணொளி

21.07.2013 ஞாயிற்றுக்கிழமை மானகரத் தந்தையின் ஊதவியாளரினால் கொடி அசைத்து தொடங்கிய ‌தேர்பவனி எதிர் பாராத அளவு பத்தர் கூட்டம் நிறைந்து மிக விவிமர்சையாக பால் செம்பு கற்பூரச் சட்டி ஏந்தி காவடிகள் ஆடிவர கூ‌டி வந்த சிவன் தேர் விழா அந்த பகுதியில் வாழும் மக்களையும் சிற்றுந்து பேரூந்தில் வந்தோர்களை நின்று பார்த்து செல்லும் அளவுக்கு அழகு பவனியாய் தேரினில் வீதி உலா வந்த சிவன் பத்தர்களுக்கு ஆனந்தத்தையும் கொடுத்துள்ளார் எனலாம்.இறைவனின் தரிசனம் மன அமைதியைத் தந்ததாய் வந்தவர்கள் கூறிச்சென்றதைக் கேட்கக் கூடியதாய் இருந்தது.

எமது ஈழத்துக் கலைஞர்கள் கௌரவிப்பு!

சுவெற்றா இசைப்பேளையில் பாடல்கள் எழுதிய பாடிய கலைஞர்களைத் தயாரிப்பாளர்களை  ஊடகம் சார்த சார்பில் சுவிஸ‌் சிறுப்பிட்டி இணையம் , தொலைக்காட்சி   சார்பில் Gtv யையும் , ஊடகத்துறை சார்பில் மணிக்குரல் தந்த முல்லைமோகனையும், தயாரிப்பாளர்களாக கணேஸ‌் தம்பதியிரையும் ,கவிஞர்கள் வரிசையில் சிவநேசன்,கந்தசாமி, சுதந்தினி . திருமதி தேவராசா, திருமதி அகிலா.ரவி,பாபு என க் சுவெற்றா கனகதுர்க்கை ஆலயம் நிர்வாகத்தினர் ஊக்கிவித்து அவகளுக்கு கௌரவிப்பு நடை பெ ற்றுள்ளது இந்த இசைபேளை குறுகிய நாட்களில் தயாரிக்கப்பட்டது மட்டுமல்ல இதில் பதினெரு புதிய பாடகர்களையும்  மூன்று புதிய பாடல் ஆசியர்களையும் அறிமுகம் செய்துள்ளது மட்டுமல்ல இளைஞர்களை சிறுவர்களை களம் இன்றி இருந்த பாடல் ஆசிரியர்களை முன்கொண்டு வந்ததற்கு காரணம் கனகதுர்கா என்று தான் கூறவேண்டும் அத்தோடு தயாரிப்பு அதற்க்கு முன்வந்த கணேஸ‌் தம்பதிகளுக்கும் கலைஞர்கள் சார்பில் நன்றிகள் மிகுதி